Saturday 3 July 2010

எங்களிண்ட போராட்டமெண்டா என்ன...?!!

உலகத்துல எந்த ஒரு உரிமைக்காக போராடுர இயக்கதுலையும் தியாகங்கள் அளப்பரியதுதான்.
அதெல்லாம் நாங்க வாயால கதைக்ககூட தகுதி இல்லாதவங்கதான்...
தன்ர சொந்தங்கல எல்லாம் விட்டிட்டு சொத்துக்கல எல்லாம் விட்டிட்டு
உயிர விட தயாராகுர எந்த ஒரு போராளியும் மதிக்கப்பட வேண்டியவன்தான்.
சும்மா இல்ல...
அவங்கெள் எல்லாம் தாய்க்கு அடுத்த இடத்துல வெச்சு மதிக்கப்பட வேண்டியெவெங்கெதான்...
இன்னொரு சமூகத்துக்கு, இன்னொரு இனத்துக்கு, இன்னொரு குழுவுக்கு சாதாரணமா தெரிஞ்சாலும்,
அவெங்கெள் எல்லாம் அதுக்குள்ள பற்றெ கஷ்டங்கெள் கொஞ்சநஞ்சமில்லதான்...
அவெங்கெளுக்குள்ள தங்கென்ற்றெ தாய்மண்ணெப்பற்றி, தங்கென்ற்ற மக்கள பற்றி...
எவ்வெளோ அன்பிருந்தா, வெறியிருந்தா எல்லாதெய்யும் விட்டிட்டு
எந்த எதிர்பார்ப்புமில்லாம, எந்த சம்மானமுமில்லாம...
அடுத்த நிமிஷம் உயிர் போகப்போறத எதிர்பாத்திட்டு ஒவ்வொரு நொடியா கழிப்பாங்க...??
இந்த தகிரியம்...
இந்த கட்டுப்பாடு...
இந்த வெறி...
உலகத்துல ''போராளி'' தவிர வேற எந்த தனி மனிஷனுக்கும் வரவே வராதுதான்!!!
இலங்கையுல கூட...
-நான் என்ற்ற சாதாரண, பாமர மூளைய வெச்சுக்கொண்டு சும்மா யோசிக்கன்...-
போராடிக்கொண்டிருந்த ஒவ்வொரு போராளியும்
தனக்கெண்டு என்ன லாபத்த...
என்ன எதிர்பார்ப்ப...
வெச்சுக்கொண்டு போராடியிருப்பான்???
எதுவுமே மண்டைக்குப் படுதில்ல...!
எல்லாம் இனத்துக்காக!
அப்ப அவெனுக்கு அவன்ற்ற்ற இனம் பெரிசா தெரிஞ்சிருக்கு...
பிழயில்ல...
மதிக்க, மரியாத செய்யவேணும்,கட்டாயமா!!!
ஆனா...
இவளவு கஷ்டப்பட்டிட்டு...
தியாகம் செஞ்சுட்டு...
உயிர குடுத்து போராடிட்டு...
-இங்க நல்ல கவனிங்கோ-
''நாங்க யாருக்கெதிரா போராடுரமோ...
அந்த பெரும்பான்ம எங்கெளுக்கு செஞ்செ
அதே பிழய...,
அதே வக்கிரத்தனத்த...
அதே ஆக்கிரமிப்ப...
எங்கெளுக்கு பக்கத்துல,
எங்கெளோட தோளோட தோள் நிண்டு போராட வேண்டிய
இன்னொரு சிறுபாண்ம இனத்துக்கு
கொஞ்சங்கூட இரக்கமில்லாம செஞ்சா...''
-இந்த வசனத்த தயவு செஞ்சு இன்னொருக்கா வாசிங்கெளன்...!-
இப்ப தொடருரன்....
...இரக்கமில்லாம செஞ்சா...
அந்த தியாகத்துட,
அந்த கஷ்டத்துட,
அந்த ''போராளி'' என்ட வார்த்தையின்றெ
அர்த்தமென்ன?
எந்த வகையுல அதுக்குபிறகு அந்த மற்ற சிறுபான்மயிட்ட இருந்து என்ட போரட்டத்துக்கு
ஒத்துழைப்ப எதிர்பார்ப்பன்?
அந்த மக்களெல்லாம் எப்புடி பிறகு தங்குட வாழ்க்கைய எங்கிட்ட ஒப்படைப்பாங்க?
அப்புடி நம்பிக்க வார மாதிரி இந்த மூண்டு தச வருஷத்துல என்ன செய்திருக்கெம் நாம அவெங்கெளுக்கு...?
யாழ்ப்பாணத்துலயிருந்து ஒரேயடியா, ஒரே இரவுக்குள்ள அத்தின சனத்தையும்
அடிச்சு விரட்டினத்த சொல்லுவெமா?
மட்டக்களப்புள, படுவாங்க்கற, கிராங்குளம், கர்பலா மாதிரி பல கிராமத்தையும் ஆக்கிரமிச்சத்த சொல்லுவெமா?
காத்தாங்குடியுல ஹுசைனியா, மீரா பள்ளியுல 101 பேர தொழுகையுலேயே சுட்டு தள்ளினமே
அத சொல்லுவெமா?
அட மறந்திட்டமே,
இப்ப கிட்டத்துல மூதுருல ஒரு இரவுக்குள்ள அத்தின ஜனங்கெளையும் பாக்காம
தாக்கி அகதியா(க்)கினத்த சொல்லுவெமா? இப்புடி எத்துன இருக்கு...
யாழ்ப்பாணத்துல ஆமி வாரானெண்டா ஆறு மணிக்குபிறகு கதவ பூட்டினம் ''நாம''...!!
ஆனா ஒல்லிக்குளத்துலயும் காத்தாங்குடியிலயும் ''நாம'' வாரமெண்டு அதே ஆறுக்கு பிறகு
கதவ பூட்டின அந்த மக்களுட்ட போய்
''அந்த 'நாம' எங்குற நமக்கும் ஆமிக்கும் வித்தியாசம் கேட்டா எப்புடி சொல்லுங்கெள்???''
இப்புடி நம்முட போராட்ட வரலாற்றுல எந்த ஒரு புள்ளியிலையும்
அந்த மக்கள கவனிச்சதாவே தெரியெலியே...!

எனக்கு போராட்ட வரலாறெல்லாம் வாசிக்க நிரம்ப ஆச...
அப்புடி வாசிக்குறப்பெல்லாம் அந்த ஒவ்வொரு போராளியிண்ட
தியாகமும், கட்டுப்பாடும், மன வைராக்கியமும், இனப்பற்றும்...
என்ன மெய்சிலிர்க்க வைக்குதுண்டு சும்மா சொன்னா, அது
வெறும் எழுத்துக்காக எழுதின மாதிரி போய்டும்...
அந்த அளவுக்கு அவங்களோட அர்ப்பணிப்பு என்ன கண்கசிய வைக்குது...
ஆனா...

ஆனா...
இவ்வளவு போராட்டத்தையும் அந்த மக்களுக்கு வேற மாதிரி அறிமுகப்படுத்திட்டமே எங்குற ஆதங்கத்த
ஒவ்வொரு போராட்ட வரியையும் வாசிக்குறப்ப
என்னால தவிர்க்க முடியலயே...

(இந்த வரிகளில் எதுவும் இன்று அகதி முகாம்களில் சொல்லொணாத்துயருறும்
சாதாரண தமிழ் மக்களை கருத்திற் கொண்டோ, அல்லது அவர்களின் துன்பங்களை
சாமான்யமாக கருதும் நோக்கிலோ நிச்சயமாக எழுதப்படவில்லை.
அவர்களுக்குரிய தீர்வு காணப்பட வேண்டியது எல்லோருடையதுமான இன்றியமையாத கடமை!!!)

1 comment:

  1. அழகான யாழ்ப்பாண மொழி,
    எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கவே மனம் சொல்லும்.
    அது சரி போராட்டம்/போராளி பற்றி ஏண்டா திரும்பவும் அர்த்தம் தேடப்பார்க்கிறாய்?
    அரசியலிடம் வரலாறை உளறுவதை விட அஸீஸ் மாமாவின் பாட்டொன்றைப் படிக்கலாமெலுவா :)

    ReplyDelete